உலக சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்திய தங்கத்தின் திடீர் சரிவு! இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய கடும் சரிவுக்கு பின்னர் மீண்டும் உச்சம்தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக சந்தையில் தங்கம் ஒரே நாளில் ஒரு அவுன்ஸிற்கு கிட்டத்தட்ட $500 சரிந்ததால், பங்குச் சந்தையில் பெரும் பதற்றம் நிலவியிருந்தது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
இந்நிலையில், நேற்றைய கடும் சரிவுக்குப் பிறகு, இன்று (ஜனவரி 30, 2026) ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தங்கம் ஒரு அவுன்ஸ் $5,447 என்ற அளவில் வர்த்தகமாகியுள்ளது.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை நிலவரம்
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri