அம்பாறையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு: இருவர் கைது
அம்பாறையில் (Ampara) வீடொன்றில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிளை கடத்திய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, நேற்றையதினம் (12.05.2024) பொத்துவில் பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்த மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பூர் பகுதியில் கைதான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam