வெளிநாட்டுக்கு சென்ற வீட்டு உரிமையாளர் - கொழும்பில் பணிப்பெண்ணின் மோசமான செயல்
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றில், பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 83 லட்சத்து 10ஆயிரம் ரூபா பெறுமதியான 15 பவுணுக்கும் அதிக எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 11 லட்சத்து 33ஆயிரம் ரூபா வெளிநாட்டுப் பணத்தைத் தொடர்ச்சியாக திருடிய வீட்டுப் பணியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருட்டுச் சம்பவம்
இவர் ஏற்கனவே டுபாயில் 15 ஆண்டுகளும், குவைத்தில் 3 ஆண்டுகளும் பணி புரிந்த அனுபவம் கொண்டவராகும். பொரலஸ்கமுவ, வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாளராக இருந்து வந்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வதைப் பயன்படுத்திக்கொண்ட பெண் அந்த இடைவெளிகளில் தங்க ஆபரணங்களையும் வெளிநாட்டுப் பணத்தையும் திருடியுள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த 30 ஆம் திகதி சந்தேகநபரை கைது செய்தனர்.
விசாரணைகளின் மூலம் தெரியவந்த தகவல்களுக்கு அமைய, திருடப்பட்ட தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்த நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகைகள்
சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களின் ஒரு பகுதி மற்றும் 4 லட்சத்து 30,000 ரூபா வெளிநாட்டுப் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், திருடப்பட்ட ஆபரணங்களின் ஒரு பகுதியை நீர்கொழும்பு நகைக்கடை உரிமையாளர் உருக்கி, குருணாகல் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this video
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam