சம்பூர் பகுதியில் கைதான முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய நால்வருக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி மற்றும் ஏனைய மூவர் என நான்கு பேர் நேற்று (12) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறிப்பாக பல்கலைக்கழக மாணவி உட்பட மூன்று பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டின் கீழ் சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரும் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெளிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸாரை மிரட்டிய மாணவி
இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிஸாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயத்துக்கு உள்ளான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நேற்றையதினம் சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்பூர் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிய நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாக தெரிவித்தே குறித்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 18 மணி நேரம் முன்

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
