நடுக்கடலில் இடைமறிக்கப்பட்ட கப்பல் - PCPA என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல்
காசா நோக்கிச் சென்ற “குளோபல் சமிட்” மிதவை கப்பல் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, அதில் பங்கேற்ற இரண்டு செயற்பாட்டாளர்கள் விசாரணைகளுக்காக இஸ்ரேலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சைஃப் அபு கேஷெக் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தியாகோ அவிலா ஆகிய இருவருமே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
PCPA என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள்
குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இருவரும் அமெரிக்க நிதியமைச்சகத்தால் ஹமாஸுடன் தொடர்பு இருப்பதாகக் கூறித் தடைகள் விதிக்கப்பட்ட PCPA என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam