நள்ளிரவில் சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை! உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எரிவாயு விலை உயர்ந்தால், உணவு விலைகள் குறித்து மீண்டும் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எரிபொருள் விலை
எரிபொருள் விலை ரூ. 12 முதல் 15 ரூபாய் வரையில் சிறியளவில் அதிகரித்துள்ளது. எனவே, உணவு மற்றும் குளிர்பானங்களின் விலையை உயர்த்த முடியாது. உண்மையில், இதனை ஒரு செலவாக கருத முடியாது. எனவே, பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது.

எனவே உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக விலைக்கு உணவு விற்கும் உணவகங்களில் நுகர்வோர் விவகார ஆணையம் சோதனை நடத்தி, அவர்களுக்குத் தேவையான தண்டனையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த முறை உணவுப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டபோது, ஒரு முட்டையின் விலை ரூ. 42 ஆக இருந்தது. இப்போது ஒரு முட்டையின் விலை சுமார் ரூ. 26 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை முன்பு ரூ. 1450 ஆக இருந்தது, இப்போது ரூ. 1250 முதல் ரூ. 1350 வரை குறைந்துள்ளது.
உணவுப்பொருட்களின் விலை
எனவே, உணவுப்பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது என்று நுகர்வோருக்கு தெரிவிக்கின்றோம். இருப்பினும், எரிவாயு விலை அதிகரித்தால், அது குறித்து விவாதித்து, உணவுப்பொருட்களின் விலையை உயர்த்துவதா அல்லது குறைப்பதா என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

மார்ச் 31 முதல் ஃப்ரைடு ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 30 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் மின்சாரக்கட்டணம் அதிகரித்ததன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், உணவக உரிமையாளர்கள் சங்கம் ஒரு தே நீர் கோப்பை மற்றும் ஒரு பால்மா தேயின் விலையை ரூ. 5 உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri