நாட்டின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!
கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை(04.08.2026) நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) வெளியாகியுள்ளது.
இதற்கமைய, நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் கால அளவு பின்வருமாறு,
- மொரட்டுவ (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை - 5 மணி நேரம்) கொரலவெல்ல, கட்டுக்குருந்த, மொதறை, மதம்பவந்த, பொல்வத்த, ஸ்ரீய பிளேஸ், க்ளோவ்ஸ் மாவத்த, குணவர்தனராம வீதி, லேக் வல, புனித பீட்டர்ஸ் லேன், பி. எம். பெர்னாண்டோ மாவத்த, பஹவிதான மாவத்த, ஜனஜய வீதி, புனித பீட்டர்ஸ் வீதி, பிரான்சிஸ்கோ பிளேஸ், எகோடௌயன மற்றும் மெல்வில் வத்த.

- பனதுறை (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை - 5 மணி நேரம்)
- பனதுறை, கிரிபெர்ரி, ஹிரானா, கேசல்வத்த மற்றும் பின்னவத்த.
- பண்டாரகம (காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 12 மணி நேரம்) பண்டாரகம, ரைகம, மில்லேனிய, வால்மில்ல, கிடெல்பிட்டிய, அலுபோபுல்ல மற்றும் மொரோந்துடுவ. ஹொரணை (மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்) ஹொரண, மதுரவல மற்றும் பொருவடந்த.
- கும்புகா (மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்) கும்புக, கோனபொல, கஹதுடுவ மற்றும் கிரிவத்துடுவ.
- இங்கிரிய (மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்) இங்கிரிய மற்றும் நம்பப்பன.
- பிலியந்தலா (நாளை மாலை 4.00 மணி முதல் நாளை மறுநாள் (05ஆம் தேதி) காலை 8.00 மணி வரை - 16 மணி நேரம்) பிலியந்தலா, வேரஹேரா, மடபத்தா, ஹொன்னந்தரா, கெஸ்பேவா, பொல்கசோவிட்ட, கஹபொல, மொரட்டுவ வீதி, கொஸ்பெலென்னா, கங்காராமய வீதி மற்றும் நீலமஹாரா.
இந்த நீர் விநியோக நிறுத்தம் காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு, 1939 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.