சிங்கப்பூரில் உல்லாசம் - ஒரே நாளில் குணமடைந்த ஷிரந்தி! அம்பலமான ஆதாரங்கள்
சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் நாட்டில் இருந்து சிங்கபூருக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சிங்கபூரில் மிகவும் பிரபல்யம் பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி
ஆனால் மிகவும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளியாக சென்ற ஒரே நாளில் குணமடைந்து பொருட்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
புதிய புகைப்படங்கள்
ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே ஷிரந்தி சிங்கப்பூர் சென்றுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஷிரந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

