படுகொலை செய்யப்பட்ட உணவக உரிமையாளர்.. பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
கல்பிட்டி - கல்கிஸ்ஸ, சோய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலை சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்பு கொள்ளுங்கள்..
இக்கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகளையும் காணொளி பதிவுகளையும் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

எனவே, சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கல்கிஸ்ஸ பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி (071-8591661) அல்லது கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியை (071-8596408) தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri