இலங்கையின் தலையெழுத்தை மாற்றியிருக்க வேண்டிய அந்த ஒரு வரலாற்றுத் தவறு
இலங்கை தனது புவியியல் அமைவிடத்தின் கேந்திர முக்கியத்துவத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
சுதந்திரத்திற்குப் பின்னரும், 1977ஆம் ஆண்டிற்குப் பின்னரும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், இன, மத மற்றும் மொழி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை வழங்கியதால் அந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் இலங்கை போன்ற இறக்குமதியைச் சார்ந்த நாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
ஜப்பானின் இலகு தொடருந்து திட்டம் மற்றும் சீனாவின் போர்ட் சிட்டி உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்கள் கொள்கை மாற்றங்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை காரணமாகப் பாதிக்கப்பட்டமை, சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போதைய நுகர்வுப் பொருளாதார முறையிலிருந்து மாறி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக உருவெடுக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய வலியுறுத்தலாக உள்ளது.
இதற்காக வணிக நடவடிக்கைகளை எளிதாக்குதல், ஊழலைக் குறைத்தல், நிர்வாகத் தடைகளை நீக்குதல், தொழிலாளர் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான தகவல்களுக்கு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியை காண்க...
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri