டக்ளஸ் வழக்கில் திருப்பம்! அநுர பக்கம் சென்ற ஆதரவாளர்கள்..
பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கடந்த காலங்களில் அரசுடன் இணைந்துதான் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று ஊடகவியலாளரும் , அரசியல் ஆய்வாளருமான ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதனடிப்படையில் எய்தவன் இருக்க அம்பை மாத்திரம் கைது செய்யும் நிலைமை தான் இங்கு வந்துள்ளது.
இந்த கைதுகள் தமிழ் மக்களை திருப்திப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டவை என்றும் கூறிவிட முடியாது. மகிந்த ராஜபக்ச போன்றோரின் குற்றங்கள் தொடர்பில் இன்னும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நகர்வுகள் பெருந்தேசியவாத அரசியலுக்கு கட்டுப்பட்டு தான் உள்ளன என குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காணவும்..
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam