மாகாண சபைத் தேர்தலை நடாத்துங்கள்..! அநுர அரசிடம் சுரேஷ் வலியுறுத்து

Provincial Council Anura Kumara Dissanayaka Suresh Premachandran NPP Government
By Theepan Jan 01, 2026 11:39 AM GMT
Report

ஜனாதிபதி அநுர பதவிக்கு வருவதற்கு முன்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், இழுபறிகளில் காலம் கடத்தப்படுகின்றதே தவிர, தேர்தல் வைப்பதற்கான எந்த உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு, "தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், குறைந்த பட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதனூடாக மாத்திரமே அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கையிலெடுத்து, இயலக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு - கிழக்கில் உருவாக்க முடியும்.

கொழும்பு மாநகர பாதீடு: முஜுபுர் ரஹ்மான் தெரிவித்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர பாதீடு: முஜுபுர் ரஹ்மான் தெரிவித்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு

தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்கள்

அரசு பதவிக்கு வந்து புதிய அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசினாலும்கூட, அந்த அரசியல் சாசனம் வருமா? வராதா? அவ்வாறான அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான நிலைத்திருப்பதான தீர்வு எட்டப்படுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துங்கள்..! அநுர அரசிடம் சுரேஷ் வலியுறுத்து | Hold The Provincial Council Elections

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு இன்று இருக்கக்கூடிய சட்டபூர்வமான பொறிமுறை என்பது மாகாண சபை மாத்திரமே. ஆகவே, அந்த மாகாண சபை அதிகாரங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கககூடிய ரெலோ, புளொட், சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகளுடன் இணைந்து தேர்தலை வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கின் பல மாவட்டங்களில் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

இன்று தமிழரசுக் கட்சியும் இணைந்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற பொது விடயத்தில் ஒருமித்துச் செயற்பட ஆரம்பித்திருக்கின்றோம்.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கரைத் தமிழ் கட்சிகள் சந்தித்தபோது, மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்க வேண்டும் என்று கோரியபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதனை ஏற்றுக்கொண்டார்.

ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சகல கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதன் மூலம் இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாகவே இருக்கின்றோம் என்பதை இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு

ஈழ விடுதலைக்கான மிகப் பலமான ஆயுதப் போராட்டம் ஒன்றை முப்பது ஆண்டுகள் நடத்தி பல்வேறுபட்ட தியாகங்களையும் அழிவுகளையும் சந்தித்த தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிந்துபோகும் நிலைக்கு நாங்கள் இடம்கொடுக்கக்கூடாது.

ஆகவே, கால சூழ்நிலைக்கேற்ப, மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மிகவலிமையாக இருக்கின்றோம் என்ற கற்பனையிலும் பேரம்பேசும் ஆற்றலில் இருக்கின்றோம் என்ற கற்பனையிலும் மிதந்து யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு எல்லாம் உடனடியாகக் கிடைத்துவிடும் என்று செயற்படுவது புத்திசாலித்தனம் அல்ல.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துங்கள்..! அநுர அரசிடம் சுரேஷ் வலியுறுத்து | Hold The Provincial Council Elections

போராட்ட காலத்திலும் அதன் பின்னரான இன்றைய காலம் வரையிலும் இந்தியாவை ஆக்ரோஷமாக எதிர்த்து வந்த பலரும் இன்றுதான் இந்தியாவின் நட்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

எமக்கு அண்மையில் இருக்கக்கூடியதும் எட்டு கோடி தமிழ் மக்களையும் நூற்றுநாற்பது கோடி மக்களையும் கொண்ட உலக வல்லரசுகளில் மதிக்கக்கூடிய ஒன்றான இந்தியாவின் நட்பு அவசியம் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மிக நீண்டகாலமாவே வலியுறுத்தி வந்திருக்கின்றது.

இன்று அதனை பல்வேறு தமிழ்த்தரப்புகள் புரிந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! அவசரகால நிலை அறிவிக்க முடிவு..

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! அவசரகால நிலை அறிவிக்க முடிவு..

மேலதிக தகவல் - ராகேஷ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US