கொழும்பு மாநகர பாதீடு: முஜுபுர் ரஹ்மான் தெரிவித்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு
ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தியே கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
ஜனாதிபதி செய்த டீல்
நிறைவேற்றதிகார பலத்தை வைத்துக் கொண்டு வெற்றி பெறாவிட்டால்,அதற்கான பலன் இல்லாமல் போய்விடும் அல்லவா.எங்களுக்கு எந்த பலமும் இல்லை.நாங்கள் ஜனாதிபதிக்கு கீழே உள்ளவர்கள்.
எங்களுக்கு அவ்வளவு பலம் இல்லை. ஜனாதிபதி தனது பலத்தை பயன்படுத்தி ஆணைக்குழுக்களை நியமித்தது உறுப்பினர்களை பயமுறுத்தி வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கே.
ஏன் இதற்கு முன்னர் நியமிக்கவில்லை.ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் முடிந்துவிட்டது.ஏன் அப்போ செய்யவில்லை.முதலில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தால் இந்த ஆணைக்குழுக்கள் வந்திருக்காது.

இது தான் உண்மையாகும்.அதனால் ஜனாதிபதி தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்.இந்த வர்த்தமானிக்கு பயந்தே சிலர் வரவில்லை.இது தான் டீல் என்றோ தெரியவில்லை.
இவர்கள் முறைமை மாற்றத்திற்கே வந்தார்கள்.ஆனால் அதே டீல் அரசியல் தொடர்வதாகவே தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.