சுகாதார அமைச்சிலுள்ள 12 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஏற்படப்போகும் ஆபத்து
சுகாதார அமைச்சில் பணியாற்றும் 12 சிரேஷ்ட அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை முழுமையாக கணக்காய்வு செய்யக் கோரி, ‘சிவில் புலனாய்வு முன்னணி’ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள்
அதன்படி, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் நிர்வாக இயக்குநர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, அரச மருந்தாக்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் மனோஜ் வீரசிங்க,
மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பேராசிரியர் அசிதா டி சில்வா, அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் பெர்னாண்டோ புள்ளே, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க,
மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சச்சின் சேமகே, சுகாதார சேவைகள் பிரதி இயக்குநர் ஆகியோரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர,

மருத்துவ விநியோகப் பிரிவு மற்றும் மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பணியாற்றும் பிரதி இயக்குநர் பதவிகளை வகிக்கும் அனைத்து மருந்தாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு ‘சிவில் புலனாய்வு முன்னணியின்’ அழைப்பாளர் சஞ்சய மஹாவத்த, தனது முறைப்பாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு News Lankasri