ஆணையை மீறினால் மக்கள் பாடம் புகட்டுவர் - அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை
இந்த நாட்டு மக்கள் சக்திக்கு முன்னால் வேறு எந்தச் சக்தியும் தாக்குப் பிடித்து நிற்க முடியாது. எனவே, மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்பட்டால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் கே.டி.லால்காந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பானது தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலையடைந்துள்ளது. எனவே, எமது பயணத்தைக் குழப்புவதற்கு அந்தத் தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
மக்களை குழப்பும் செயற்பாடு
இந்தச் சதி நடவடிக்கைக்குச் சில தீய எண்ணம் கொண்ட ஊடகங்களும் துணை நிற்கின்றன. மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட்ட அரசுகளுக்கு இந்த நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டினர்.

அதேபோல் மக்களைக் குழப்பும் வகையில் செயற்படும் ஊடகங்களுக்கும் மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்கள். மக்கள் சக்திக்கு முன்னால் வேறு சக்திகள் தாக்குப் பிடித்து நிற்க முடியாது.
ஊழல், மோசடி அற்ற பயணம் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு எதிராகச் சிலர் செயற்படுகின்றனர். அரசு கவிழும் என்றெல்லாம் கதைகளைப் பரப்பி வருகின்றனர் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |