துருக்கி நிலநடுக்கத்தில் உயிருடன் மீட்கப்பட்ட சிசு தொடர்பில் வெளியான தகவல்
உலக நாடுகளை உலுக்கிய துருக்கி நிலநடுக்கத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மாத சிசு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வில் இடிபாடுகளில் இருந்து 128 மணி நேரத்திற்கு பின்னர் சிசுவொன்று மீட்கப்பட்டிருந்தது.
இதன்போது சிசுவின் தாய் மற்றும் உறவினர்கள் அனர்த்தத்தில் இருந்து உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் உக்ரைன் அமைச்சர் அன்ரன் கெரஸ்ஷெனோக்கோ இன்று மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
வெளியான தகவல்
நிலநடுக்கத்தில் பலியானதாக கூறப்பட்ட சிசுவின் தாயார் உயிருடன் இருப்பதாக அவர் தமது ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். சிசுவின் தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் இதுவரை காலமும் சிகிச்சை பெற்று வந்துள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது.
மரபணு பரிசோதனை மூலம் அவரே சிசுவின் தாயார் என்பதும் 54 நாட்களுக்குப் பின்னர் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தாயும், சிசுவும் இணைந்துள்ளனர்.
துருக்கியில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நில அதிர்வில் 30 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன், 6 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
