அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து டயானா கமகே மகிழ்ச்சி தெரிவிப்பு
ஏற்றுமதி நோக்கில் கஞ்சா பயிரிட அனுமதியளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் அமைச்சர் டயானா கமகே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தொடர்பில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எதிர்ப்பு வெளியிடப்பட்ட பல விடயங்கள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசு எதிர்க்கட்சியில் இருந்த போது எதிர்ப்பு வெளியிட்ட பல்வேறு விடயங்களை இன்று செய்து வருகிறது.
குறிப்பாக கெசினோவுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிட எதிர்ப்பு வெளியிட்டனர். இரவு பொருளாதரம் தொடர்பில் விமர்சித்தனர்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம்
ஆனால் இன்று அவை அனைத்துமே சரி என ஏற்றுக்கொண்டுள்ளதால் நடைமுறைப்படுத்துகின்றனர். ஏற்றுமதி நோக்கில் கஞ்சா பயிரிட வேண்டுமென்று நான் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியுள்ளேன்.
அதனை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



