கஞ்சா செய்கை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டது
கஞ்சா செய்கை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட திட்டம் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கஞ்சா பயிர்ச் செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஒர் திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சியினரும் ஆதரவு வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்ததாகவும், இந்த திட்டத்தின் ஆபத்தான விடயங்களை அப்போது எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அந்த ஆபத்துக்களை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டு கஞ்சா செய்கையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மீரிகம முதலீட்டு வலயத்தில் ஏற்கனவே இந்த திட்டத்திற்காக நான்கு நிறுவனங்களுக்கு காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை மூலப் பொருளாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது எனவும், பெறுமதி சேர்க்கப்பட்ட ஓர் உற்பத்தியாக ஏற்றுமதி செய்யப்படும் எனவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam