புலம்பெயர்ந்தவர்களை திருப்தி படுத்தவே அநுர அரசு முயற்சி: தமிழரசுக் கட்சிக்கு வெளிநாட்டில் எதிர்ப்பு!
புலம்பெயர்ந்தவர்களை திருப்தி படுத்தி, அதன் மூலம் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் அநுர இருக்கிறார் என புலம்பெயர் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அம்பலமான அநுரவின் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அநுர அரசாங்கம், புலம்பெயர்ந்தவர்களின் உதவியுடன் நாட்டை முன்னேற்ற முயற்சி எடுக்கிறது. இந்த விடயத்திற்கு சிங்களவர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு உள்ளது.
அத்துடன், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தமிழரசுக்கட்சி மீது அவநம்பிக்கையே உள்ளது.

அரசாங்கத்தின் தற்போதைய போக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு வருத்தத்தையே தருகிறது. அதே போன்று வடக்கு, கிழக்கில் நடக்கும் சமூக சீரழிவு காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வாள்வெட்டுக்கள், மோசடி கும்பல்கள், போதைப் பொருள் ஆகிய குற்றங்கள் தமிழர் பகுதியில் அதிகரித்துள்ளதால், அது எங்களுக்கு சவாலாக மாறியுள்ளது.
இது போன்று நேர்காணலில் வேறு என்னென்ன விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது என்பதை காணொளியில் பார்க்கலாம்.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam