விசாரணை வளையத்தில் கப்டன் ராயூ- சிக்கிய முகமட் - TMVPயின் பிரித்தானிய தொடர்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அதே சூழ்நிலையில் இதன் பின்னணியில் சில இரகசிய கைதுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக இராணுவ புலனாய்வு அமைப்புக்களோடு தகவல் வழங்குநர்களாக செயற்பட்டவர்களது விபரங்கள் தற்போது திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தவகையில் குறித்த தகவல் வழங்குநர்கள் இராணுவ புலனாய்வாளர்களை தவறாக வழி நடத்திய சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் அண்மையில் கைதாகி இருக்கக்கூடிய மொஹமட் ஷாகித் தொடர்பில் இன்னுமொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது இவர் 3 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



