உலக நாடுகளை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! தோண்ட தோண்ட குவியும் பிணங்கள் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 9 ஆயிரத்து 57 பேரும், சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளதுடன், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
புதிய இணைப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது.
முதல் நிலநடுக்கம் 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலையில், 2 வது நிலநடுக்க 7.5 என்ற ரிக்டர் அளவிலும், 3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகியிருந்தன.
தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவின் பகுதிகளில், பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளதுடன்,துருக்கியில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
துருக்கியில் சுமார் 25 ஆயிரம் அவசர கால பணியாளர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தில் இடிந்து தரை மட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை நவீன இயந்திரங்கள்உதவியுடன் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுவது, இவ்விரு நாடுகளிலும் நெஞ்சை நொறுக்கும் துயரமாக மாறி இருக்கின்றது.
இந்நிலையில் துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 5,894 பேர் மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நிதி திரட்டும் ரொனால்டோ
மேலும் துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார் என துருக்கி கால்பந்து வீரர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து உலகமும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் கிடைக்கும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என துருக்கி கால்பந்து வீரர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இயல்பு நிலை
இந்நிலையில், துருக்கியில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளமையினால் இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன.எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் அஞ்சப்படுகின்றது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
