மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது! வெளியான காரணம்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் - புகிட் தெம்பன் பகுதியில் உள்ள போதைப் பொருள் வர்த்தக மையம் ஒன்றில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இரண்டு மலேசிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் உற்பத்தி
பினாங்க் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்ட போதே, இந்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
ஹெரோயின் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 4 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
