உலக நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்! 5 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி: பலி எண்ணிக்கை உயர்வு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கமைய, துருக்கியில் குறைந்தது 17,134 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது 1999 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட உதவிகளை அவசரகால பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
உலக நாடுகளை உலுக்கிய துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 19,362 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
நிலநடுக்கத்திற்கான காரணம்
இந்நிலையில், டெக்டானிக் தட்டு பகுதிகளில் அமைந்துள்ள துருக்கி தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடும் என இத்தாலிய நிலநடுக்க அறிவியலாளர் பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறியுள்ளார்.
இது அண்டைய நாடான சிரியாவுடனான மதிப்பீட்டில் அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அனடோலியன் தட்டு நகர்ந்ததில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக துருக்கியின் நிலப்பரப்புக்கு கீழே ஒரு தட்டும் மேற்கு நோக்கி மற்றொரு தட்டும் கிழக்கு நோக்கியும் நகர்ந்துள்ளமையினால் இந்த அதிர்வில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்
அனடோலியன், அராபிக்கா, யுரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய 4 தட்டுகள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக டாக்லியோனி கூறியுள்ளார்.
இதன் காரணமாக 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பல கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்துபோன ஆறாயிரத்து 400 கட்டடங்களும் ஓராண்டிற்குள் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
கடும் குளிரில் மக்கள் நடுங்கி வருவதாகவும், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
