ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை! கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் கம்பெனி சாலை வரையிலான பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடும் வாகன நெரிசல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் வழக்கு விசாரணை இன்று விசாரிக்கப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ள பின்னணில் பல அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றுக்கு வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரும், பெருமளவான சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



