ரணிலின் பிணை தொடர்பில் திலீப பீரிஸ் கடும் எதிர்ப்பு : சூடுபிடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு, அவருக்கு பிணை கிடைக்கப் பெறுவதற்காக தற்போது நீதிமன்றத்தில் பல குறிப்பிட்ட விடயங்களை முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த மருத்துவ நிலைமைகள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அழைப்புக் கடிதம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கு முடியும் வரை பிணை வழங்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் Zoom தொழில்நுட்பம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பிணை வழங்ககக்கூடாது என்ற ஆட்சேபனையை முன்வைத்திருப்பதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உபுல் ஜெயசூரிய, அலி சப்ரி மற்றும் வழக்கறிஞர்கள் குழு ஒன்று முன்னிலையாகியுள்ளனர்.
மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



