ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, அத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க வேண்டாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
நீதித்துறையில் முழு நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்று கட்சியின் இணைத் தலைவர் ருவான் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஆறு முறை பிரதமராக இருந்தவர், மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர்,
விசாரணைகளை தொடர்வதற்கு
நாட்டிற்கு அமைதியைக் கொண்டு வந்தவர், கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவர் என்பது இரகசியமல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர் ஒருபோதும் தனது சொந்த நலன்களுக்காகச் செயல்பட்டதில்லை என்றும், இந்த நாட்டை இப்போது இருப்பதை விட சிறந்த இடத்திற்கு உயர்த்த எப்போதும் உறுதிபூண்டுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவால் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கொள்கைகளால் நாடு இன்று இந்த நிலையில் உள்ளது என்பதை நினைவுகூரும் ஐக்கிய தேசியக் கட்சி, இன்று சிறையில் இருக்கும் தலைவர் ஒரு முக்கியமான தருணத்தில் நாட்டைக் காப்பாற்றிய தலைவரவார்.
ரணில் விக்ரமசிங்க அவர்கள் விசாரணைகளை தொடர்வதற்கு ஆதரவளித்த நீதித்துறையை மதித்து வந்த ஒரு சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் அனைவருக்கும் மரியாதைக்குரிய நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



