நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சுனாமி பேரலையின் நினைவேந்தல்கள்
சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள், நேற்றையதினம்(26.12.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த்தேசத்தில் சுனாமிப் பேரலை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி கருத்துரையாடப்பட்டுள்ளது.
மலர் அஞ்சலி
அத்துடன், உயிரிழந்தவர்களுக்காக ஒளிச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா
சுனாமி பேரலை ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் முகமாக நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் விசேட நினைவு கூறும் நிகழ்வு நேற்று(26) இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நடைபெற்ற இவ்விழா, தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு ஆரம்பமானது.
இதில் காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை சுனாமி உட்பட வெவ்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படதுடன் சர்வமத வழிபாடுகளும் நடைபெற்றுள்ளது.
செய்தி - திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
