ஊடகங்களுக்கு எதிரான தீர்மானத்தை எடுத்த அமைச்சர் சந்திரசேகரன்
இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை என யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சந்திரசேகரன்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(26) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி வழங்கியது? எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் என அர்ச்சுனா கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகரன், இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri