பாணந்துறையில் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரிக்கு நேர்ந்த சோகம்
பாணந்துறை - மொரட்டுவை புதிய வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, ஜய மாவத்தைக்கு அருகாமையில் நேற்று(09.03.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபர் வீதியைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
இந்த விபத்தில் கொரளவெல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாகப் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளைப் பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri