நிலைமை மோசமடையலாம்..! காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை இந்த கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
டெங்கு காய்ச்சல் பாதித்த 50 குழந்தைகள்
குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என்று பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது சுமார் 50 டெங்கு காய்ச்சல் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சுமார் கால் பகுதியினர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும், நிலைமை மோசமடைந்தால், வைத்தியசாலையின் கொள்ளளவுப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.
எனவே, தங்கள் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெறுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வீட்டில் தங்கி சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான நேரத்தை வீணடிப்பதாகும் , சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால், எங்களுக்கு இடவசதிப் பற்றாக்குறை ஏற்படலாம். தூர பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வருவதில் ஏற்படும் தாமதங்களால் பல மரணங்கள் நிகழ்கின்றன.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை
24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.

இதற்கிடையில், நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினசரி கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கிறது.
மேலும், இதுவரை நிகழ்ந்துள்ள 61 டெங்கு மரணங்களில், 47 பேர் பெண்கள் என்றும் வைத்திய நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுர, காலி, குருநாகல், கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
எனவே, சிக்கல்களின்றி நோயை குணப்படுத்த, பொதுமக்கள் மருத்துவ ஆலோசனையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அறிவுறுத்தியுள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri