இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு

NPP Government
By Kamal Mar 10, 2026 07:00 AM GMT
Report

 நாட்டில் எரிபொருள் விலை எதனால் உயர்த்தப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

உள்நாட்டு பொருளாதார நிலைமைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது உலக சந்தை நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து செலவுகளும் பொருட்களை போக்குவரத்து செய்யும் செலவுகளும் அதிகரிக்க கூடும் என  தெரிவித்துள்ள அவர் சேவைகளின் விலைகளும் உயரக்கூடிய நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை

போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை

ஏனைய நாடுகளுக்கும் நெருக்கடி

இதனால் மக்களுக்கு ஓரளவு அழுத்தத்தை எதிர் நோக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன்கள், பேருந்துகள் மற்றும் தொடருந்து உள்ளிட்ட ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிப்பதற்கு குறித்த சங்கங்கள் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு | Why Fuel Price Hiked

இதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயரக்கூடிய நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறு எனிம் இவ்வாறான ஒரு நிலைமையின் கீழும் இந்த நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் தற்போது நிலவி வரும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளும் இதே நிலைமையை இதில் நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் விலை சுமார் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பங்களாதேஷில் எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பதற்கு அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது போதியளவு எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும் எதிர்வரும் சில மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் ஏற்கனவே கொள்வனவு செய்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு | Why Fuel Price Hiked

போர் நிலைமைகளில் எரிபொருள் விநியோகம் தடைபடுவதனை தடுப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் எரிபொருளுக்கான விலைகள் உயர்த்தப்பட்டமைக்கான காரணம் அடுத்த எரிபொருள் இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய அதிக அதிக விலைகளை ஈடு செய்யும் நோக்கிலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை அரசாங்கம் தற்காலிகமானது என கருதுவதாகவும், இந்த உலக நெருக்கடி நிலைமையின் போது மக்கள் சிக்கனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் போதிய அளவு விநியோகங்களை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் தேவையற்ற பீதி அடைய தேவை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாஜித் இந்திக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

திடீரென அதிகரித்த எரிபொருள் விலை - உருவாகவுள்ள நெருக்கடி

திடீரென அதிகரித்த எரிபொருள் விலை - உருவாகவுள்ள நெருக்கடி

வெளிநாட்டில் சிக்கித்தவித்த இலங்கை அரசியல்வாதி! ரோம் புறப்பட்ட விமானம் குறித்து பரவும் தகவல்

வெளிநாட்டில் சிக்கித்தவித்த இலங்கை அரசியல்வாதி! ரோம் புறப்பட்ட விமானம் குறித்து பரவும் தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US