யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில் பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய பேரவை தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.
வழக்கு தள்ளுபடி
அது தவறு எனத் தீர்பளித்து, தன்னை மீளவும் 27.08.2022 முதல் செல்லுபடியாகும் வகையில் அப் பதவியில் நியமிக்கக் கட்டளையிடுமாறு கோரி யாழ். பல்கலைக்கழக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடே பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான கட்டளை கடந்த ஜூன் 30 ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரினால் முன்வைப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராயும் நியாயாதிக்கம் மேன்முறையீட்டு சபைக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜூரிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டளை பிறப்பித்தனர்.
இதே பேராசியர் பல்கலைக்கழகத்துக்கெதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகளைக் கடந்த வருடம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri