இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து இன்று வெளியாகவுள்ள முடிவு
இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முடிவெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீட் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் திகதியில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
இன்று நண்பகலுக்குள் முடிவு
ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடக் கோரி தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனையடுத்து, அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அவகாசம் கோரியதுடன், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் குறித்து இன்று (ஜூலை 25) நண்பகலுக்குள் முடிவெடுப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.