ஈரானை தாக்க தயார்நிலையில் ட்ரம்பின் படைகள்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
புதிய இணைப்பு
அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரித்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள American interests மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் பதிலுக்கு எச்சரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அதிரடியாக களமிறங்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கின் மிக முக்கிய பொருளாதார நாடான ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரியால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததை அடுத்து, ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆறாவது நாளை எட்டியுள்ளன.
இந்நிலையில், குறித்த போராட்டக்காரர்களை ஈரானிய இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகள் அவர்களை பாதுகாக்க முன்வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் ஈரான்
இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரான் வழக்கம் போல அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால், அமெரிக்கா அவர்களை மீட்கும்.

நாங்கள் தாக்குதலுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களுடனும் செல்லத் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி உற்பத்தியை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தது, இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில் பின்னர் போர் அமைதியை எட்டியது.
( @realDonaldTrump - Truth Social Post )
— Fan Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) January 2, 2026
( Donald J. Trump - Jan 02 2026, 2:58 AM ET )
If Iran shots and violently kills peaceful protesters, which is their custom, the United States of America will come to their rescue. We are locked and loaded and ready to go. Thank you for… pic.twitter.com/yaj5Mev7xN
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam