கனடாவில் குடியேற விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டில் கனடாவில் குடியேறுவதற்கு விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் கனடா குடியேற்ற விதிகளை கடுமையாக கட்டுப்படுத்தி, புதிய குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை அதிகரித்து வந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு குறைவு, வீட்டுவசதி செலவுகள் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தங்களை குறைக்கும் நோக்கில் இவ்வாறு குடியேற்றத்தை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2024ம் ஆண்டில் 483000த்திற்கும் மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு கனடாவில் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்க 380000 மாக குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள், கனடாவில் முன்னர் அனுபவம் பெற்றவர்கள் ஆகியோருக்கு கனடாவில் குடியேறுவதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவம், சமூக சேவைகள், வர்த்தக வேலைகள், விவசாயம், கல்வி , விஞ்ஞானம், தொதில்நுட்பம், கணிதம் போன்ற துறைகளில் அனுபவம் உடையவருக்கு குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
தற்காலிக தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் 367750 ஆக காணப்பட்ட புதிய தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கை இந்த ஆண்டு 230000ஆக குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் வெகுவாக குறைக்கப்படுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் கடுமையான தெரிவின் அடிப்படையில் குறிப்பாக திறமையானவர்களுக்கு கனடாவில் குடியேறுவதற்கும் கற்பதற்கும் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே கனடாவில் குடியேற விரும்புவோர் பிரெஞ்சு மொழி அறிவு, கல்வித் தகமை போன்றவற்றை அதிகரித்துக் கொள்வது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri