ஊடகவியலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாடு
பாகிஸ்தானில் சில ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊகட செயற்பாட்டாளர்கள் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்களை ஊக்குவித்ததாக ஊடகவியலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டில் வசித்து வருவதால், நீதிமன்றத்தில் ஒருவர் கூட முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி தஹீர் அபாஸ் சிப்ரா இந்த தீர்ப்பை நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
2023 மே மாதம், இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் சில இராணுவ கட்டிடங்கள் மற்றும் அரசு சொத்துகளை தாக்கினர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னணி காரணமாக, பாகிஸ்தானிய அரசு மற்றும் இராணுவம், தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் விசாரணைகள் மூலம் நூற்று கணக்கானவர்களை குற்றம்சாட்டி விசாரணை செய்தது.
இந்த விசாரணைகள், விமர்சன செய்திகளை தடுக்கும் நடவடிக்கை என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான சீ.பி.ஜே குற்றம்சாட்டியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏழு நாட்களுக்குள் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம் என்பதுடன் பாகிஸ்தானுக்கு திரும்பினால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan