மூன்றாம் உலகப் போர் தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
முட்டாள்களை வைத்து இந்த நாட்டை நடத்தி வருகின்ற நம்மிடம் திறமையற்றவர்கள் இருப்பதால் அடுத்த 5 மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக 3 ஆம் உலகப் போர் தொடங்கும் என டோனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பரிசோதனை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இன்று ஆயுத பலம் மிகவும் பயங்கரமாக இருப்பதால் நம் நாட்டில் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள். நம் நாடு மிகவும் பலவீனமாக உள்ளது. 3ஆம் உலகப் போரில் விரைவில் முடிவடையும் நாடாக நமது நாடு உள்ளது.
ஏனென்றால், நம் நாட்டை வழிநடத்தும் முட்டாள்கள்தான் நம்மிடம் இருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கான தொலைக்காட்சி விவாத நிகழச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு விவாதத்தில் பங்கேற்பவர்களுக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்ய வலியுறுத்துவேன் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




