தொடரும் பதற்றம் : ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நிராகரித்த ட்ரம்ப்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மத்திய கிழக்கு நாடுகள் மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நிராகரித்துள்ளததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் இராணுவக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், இந்தப் போரைத் தொடர்ந்து முன்னெடுக்கவே ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக வெள்ளை மாளிகை தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள்
தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அமெரிக்க ஜனாதிபதி ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்காவின் இலக்கு நிறைவேறும் வரை இந்த நடவடிக்கை தடையின்றித் தொடரும் என வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 'Operation Epic Fury' இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை எவ்வித போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் இடமில்லை என ஈரான் தரப்பும் தெரிவித்துள்ளது.
ஓமான் நாட்டைப் பயன்படுத்தி, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி ஆகியோர் முயன்ற போதிலும், அவை பலனளிக்கவில்லை.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri