அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த தலைவரை பரிந்துரைத்த டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க மத்திய வங்கியின் (US Federal Reserve) அடுத்த தலைவராக, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார நிபுணருமான 55 வயது கெவின் வார்ஷை (Kevin Warsh) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
2006 முதல் 2011 வரை மத்திய வங்கியின் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கெவின் வார்ஷ், கடந்த காலங்களில் வங்கியின் கொள்கைகளை, குறிப்பாக அதன் இருப்புநிலைக் குறிப்பு முகாமைத்துவம் மற்றும் தரவுகளை மட்டுமே நம்பியிருக்கும் போக்கை கடுமையாக விமர்சித்து வந்தவர்.
வட்டி விகிதக் கொள்கை
ஆரம்பத்தில் வட்டி விகித உயர்வை ஆதரிக்கும் ‘ஹாவ்கிஷ்’ (Hawkish) அணுகுமுறை கொண்டவராக அறியப்பட்ட இவர், தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரிப்பவராகக் கருதப்படுகிறார்.

ட்ரம்பின் நீண்டகால நண்பரும் நன்கொடையாளருமான பில்லியனர் ரொனால்ட் லாடரின் மருமகன் என்ற குடும்பப் பின்னணியும் வார்ஷிற்கு ட்ரம்பின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய தலைவர் ஜெரோம் பவலின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வார்ஷின் நியமனம் அமெரிக்காவின் வட்டி விகிதக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri