பதற்றத்தை தணிக்க ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
மினசோட்டாவில் இரு அமெரிக்க குடிமக்களான ரெனி குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோர் கூட்டாட்சிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிக்க ட்ரம்ப் நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மினசோட்டா மாநில அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்தால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள கூட்டாட்சிப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகையின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரி (Border Tsar) டேம் ஹோமன் தெரிவித்துள்ளார்.
படைக்குறைப்பு ஆலோசனை
உள்ளூர் பொலிஸாரும், அதிகாரிகளும் சிறைகளில் உள்ள குடியேற்றக் கைதிகளைக் கூட்டாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைப்பது போன்ற விடயங்களில் ஒத்துழைத்தால் மட்டுமே படைகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

அத்துடன் ஒபரேஷன் மெட்ரோ சேர்ஜ்' (Operation Metro Surge) என்ற பெயரில் நடக்கும் குடியேற்ற அமுலாக்க நடவடிக்கை தொடரும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் மற்றும் மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே ஆகியோர், கூட்டாட்சி முகவர்கள் மாநிலத்தை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் ரெனி குட் (Renee Good) மற்றும் அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கும் கண்டனங்களுக்கும் வழிவகுத்தது.
இதன் காரணமாகவே, பதற்றத்தைக் குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் இந்த படைக்குறைப்பு ஆலோசனையை முன்வைத்துள்ளது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam