தோட்டத் தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் கைச்சாத்து! வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே இன்று (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது.
தினசரி வேதனம் உயர்வு
ஜனாதிபதியின் 2026 பாதீடு யோசனைக்கு அமைவாக, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,350 ரூபாய் தினசரி வேதனத்தை 400 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் புதிய தினசரி வேதனம் 1,750 ரூபாயாக உயர்வடைகின்றது.
இதற்கமைய, இச்சம்பளத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.