கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி! நீதிமன்றத்தின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஒருவரை, எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (29) உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல, தனது அமைச்சுப் பதவிக்காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமார் 748 மில்லியன் ரூபாய் பணத்தை ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
30 மில்லியன் ரூபாய் பணம்
இந்தப் பணத்தை பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணமோசடி வலையமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு சொந்தமில்லாத, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 30 மில்லியன் ரூபாய் பணத்தை தெரிந்தே தனது வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்க.. Cineulagam