வயலில் பட்டம் விட்ட 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி - பொலிஸ் உத்தியோகத்தர் மகன் கைது
கடவத்தை பகுதியில் தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் கொண்டிருந்த 17 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
17 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி
இந்த தாக்குதலின் போது கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்குதலில் கழுத்தில் காயமடைந்த சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக இராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மூன்று இளைஞர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை
தப்பியோடிய மற்ற இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரின் தந்தை தற்போது பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரி என்றும் பொலிஸார் விசாணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் நேற்று(31.07.2026) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.