தீவிரமடையும் தாக்குதல்கள் - NOT NICE ..! ஹூதிக்களுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான எச்சரிக்கையையும் குற்றச்சாட்டையும் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னதாக உலகளவில் மசகு எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில், ஈரானின் தூண்டுதலின் பேரில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ராணுவத் தாக்குதல்கள்
ஈரான் ஒரு "தோல்வியடைந்த நாடு" (Failing Nation) என்றும், அந்த நாட்டிடம் கடற்படையோ, விமானப்படையோ இல்லை என்றும், உலகிலேயே மோசமான பொருளாதாரத்துடன் 301% பணவீக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் சாடியுள்ளார்.
ஹூதிக்கள் "மிகவும் மோசமாக" நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், நவம்பர் அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹூதிக்கள் நீண்ட காலமாக அமைதியாக இருந்தார்கள், ஆனால் இப்போது மீண்டும் வெளிவந்துள்ளனர்.
அநேகமாக ஈரானின் தூண்டுதலின் பேரில் - சவுதி அரேபியாவைத் தாக்கி, அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக வேண்டுமென்றே எண்ணெய் விலையை உயர்த்த முயல்கிறார்கள். இது நல்லதல்ல (NOT NICE)." என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri