ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா..! விரைவில் அமைதி ஒப்பந்தம் என ட்ரம்ப் நம்பிக்கை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரியேவைச் சந்தித்த பின்னரே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படும் என நம்புவதாகவும், இந்த ஒப்பந்தம் உக்ரைனை மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் பல நாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக, அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னதாக, மெலானியா ட்ரம்ப்பின் ஏற்பாட்டில், உக்ரைனின் ஒலேஷ்கி (Oleshky) நகரில் அக்டோபர் 27 முதல் நவம்பர் 1 வரை ஆறு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
துகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், உணவு மற்றும் மருத்துவ உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுபோன்ற மனிதாபிமான போர் நிறுத்த முயற்சியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என மெலானியா ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கிக்கும், மெலானியா ட்ரம்ப், தனிப்பட்ட கடிதங்களை வழங்கி, அவற்றைத் தத்தமது தலைவர்களிடம் ஒப்படைக்குமாறு இரு தரப்பு பிரதிநிதிகளையும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, போர் நிறுத்த முயற்சியில் மெலானியா ட்ரம்ப் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு ஆர்டர் ஒஃப் பிரின்சஸ் ஓல்கா (Order of Princess Olga) விருதை அனுப்பி வைத்திருந்தார்.