மத்திய கிழக்கில் போர் மேகங்கள்! அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருந்தும் போரைத் தேர்ந்தெடுத்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு நல்ல அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருந்தும், அதை விடுத்து போரைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அல் ஜசீரா ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த மோதல் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தடுத்திருக்கப்பட வேண்டிய ஒன்று என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப்
நாடுகளின் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் கடுமையான போக்கைக் கடைப்பிடித்து வரும் ட்ரம்ப் நிர்வாகம், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதையே தனது இறுதி இலக்காகக் கொண்டுள்ளது.

இதற்காகவே சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் பதிலடித் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு உலகப் பொருளாதாரத்தையும், குறிப்பாக எரிபொருள் விலையையும் கடுமையாகப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
"ஒரு நல்ல ஒப்பந்தத்தை விட போரே சிறந்தது" என்ற ட்ரம்ப்பின் அணுகுமுறை, மத்திய கிழக்கை ஒரு நீண்டகாலப் போருக்குள் தள்ளியுள்ளதாக அல் ஜசீரா தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam