வறுமையால் வெளிநாடு சென்ற தாய்! சடலத்தையாவது பார்க்க உதவுமாறு அரசாங்கத்திடம் கோரும் சகோதரிகள்

Trincomalee Government Of Sri Lanka Kuwait
By Kiyas Shafe Apr 09, 2026 11:03 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

குவைத்திற்கு சென்ற தமது தாய் உயிரிழந்துள்ள நிலையில், அவரை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என திருகோணமலை வெருகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவன் பகுதியைச் சேர்ந்த திலக்சாணி (25) மற்றும் கிருசாணி (23) ஆகிய இரு சகோதரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் எப்படியாவது அம்மாவின் சடலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கமாக கோரியுள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2008ஆம் ஆண்டு இந்தச் சகோதரிகளின் தந்தை சிவலிங்கம் வனராசா அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

நடைமுறைக்கு வரும் தடை - வழங்கப்பட்டது விசேட உத்தரவு

நடைமுறைக்கு வரும் தடை - வழங்கப்பட்டது விசேட உத்தரவு

வெளிநாட்டு வேலைக்காக சென்ற தாய்

அன்றிலிருந்து இன்றுவரை தந்தை வருவார் என்ற ஏக்கத்துடனேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர். குடும்பத் தலைவன் இன்றி தவித்த வேளையில், தற்துணிவுடன் எழுந்து நின்றவர் இவர்களின் தாய். தன் இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி மீனா குவைத் நாட்டுக்குத் தொழில் நிமித்தம் சென்றார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மாரடைப்பு காரணமாக குவைத்தில் காலமானார் என்ற செய்தி வந்து சேர்ந்துள்ளது. தந்தை காணாமலாக்கப்பட்ட துயரம் ஒருபுறம் இருக்க, தற்போது தாயையும் இழந்து நிற்கும் இந்தப் பிள்ளைகள், தங்களது தாயின் பூதவுடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக இலங்கைக்குக் கொண்டு வர உதவுமாறு அரசாங்கத்திடமும், உரிய அதிகாரிகளிடமும் மன்றாட்டமாகக் கோருகின்றனர்.

மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயார்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயார்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

கோரிக்கை

குறித்த சகோதரிகள் கூறுகையில், அப்பா காணாமல் ஆக்கப்பட்ட போது எங்களுக்குச் சிறிய வயது. அவருக்கு இறுதிச் சடங்கு கூட செய்யக் கொடுத்து வைக்கவில்லை. அந்த வலி இன்றும் எங்களை வாட்டுகிறது.

இப்போது எம்மை வளர்த்து ஆளாக்கிய அம்மாவும் பிரிந்துவிட்டார். அவரின் முகத்தையாவது கடைசியாக ஒருமுறை பார்த்து, முறைப்படி இறுதி மரியாதைகளைச் செய்ய எங்களுக்கு வழிவகுத்துத் தாருங்கள் என உருக்கமாக கோரியுள்ளனர்.

போர்நிறுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் தாக்குதல்! இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி

போர்நிறுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் தாக்குதல்! இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி

இந்த இரு இளம் பெண்களின் எதிர்காலத்தையும், அவர்களது நியாயமான கோரிக்கையையும் கருத்திற்கொண்டு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US