நடைமுறைக்கு வரும் தடை - வழங்கப்பட்டது விசேட உத்தரவு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புக்களை வழங்குவதோ அல்லது அவற்றை சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
முறையற்ற நடவடிக்கை
புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் அதிகாரிகளிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்திடம் நிதியுதவி கோருவதோ முறையற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளித்தரப்பினரின் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விழாக்களை நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு உபசரிப்புக்காக ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தலா 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து வழங்க பொலிஸ் மா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை
இதேவேளை பண்டிகை காலங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைக் காலங்களில் சிறு விபத்துகள் ஏற்பட்டாலும், அந்த ஓட்டுநர்கள் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 21 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam