நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட ஆயுதங்கள் - ஏற்பட்ட பெரும் மனித பேரவலம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை, அரசாங்கத்தின் முறையான தலையீடு இன்மையால் பெரும் மனித பேரவலமாக மாறியுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
ஆயுதங்கள் அகற்றல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலையிலிருந்த அனைத்து ஆயுதங்களும் 5ஆம் திகதி இரவே அகற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின்னணியில், ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்றும், அதிகாரிகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்றும் கேள்வி எழுகின்றதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டபோதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால், 6ஆம் திகதி நிலைமை விபரீதமாகி சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, 5ஆம் திகதி இரவே சிறைச்சாலையில் இருந்த அனைத்து ஆயுதங்களும் அகற்றப்பட்ட நிலையில், சிறைச்சாலையின் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
ஆயுதங்கள் அகற்றப்பட்ட பின் ஜன்னல் வழியாக துப்பாக்கிச்சூடு நடத்திய யார்? என்ற கேள்வி தற்போது எழுகின்றது.
5ஆம் திகதி இரவே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டதே தவிர, இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்டு முறையான பாதுகாப்புப் பலப்படுத்தல் செய்யப்படவில்லை. இதனால் 6ஆம் திகதி நடந்த படுகொலைகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri