நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர் சுற்றிவளைப்பு : பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை(Photos)
திருகோணமலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிண்ணியா கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள கடை ஒன்றில் விலை பட்டியல் காட்சிப்படுத்தாமல் விற்பனைக்காக பதுக்கி வைத்த 50 கிலோகிராம் கீரிச்சம்பா அரிசி கைப்பற்றப்பட்டது.
இன்றையதினம்(25.09.2023) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த அரிசி கைப்பற்றப்பட்டது.
சட்ட நடவடிக்கை
மேலும், திருகோணமலை நகரில் விலைப்பட்டியலின்றி விற்பனை செய்த மூன்று கடை உரிமையாளர்கள் உட்பட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் முன்னால் உள்ள கடையில் மென்பானம் போத்தலில் குறிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்த ஒருவருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |